திங்கள், 4 பிப்ரவரி, 2013

மகேந்திரன்

சிந்தனையை செதுக்குவார் சிலர்..
நமக்கு சிலை கிடைக்கும்
இவரின் திரைப்படங்கள்
திரும்ப திரும்ப
ரசிக்கத் தூண்டும் மகாபலிபுரம்....

வியாழன், 6 டிசம்பர், 2012

என்னை பார் சிரி

அடித்து பழுத்தால்
வெம்பிடும் பழம்
குழந்தைகளுக்கோ
சிரிக்க  நடித்தாலும்
விம்மிடும் குணம் ?

யாரிவனோ?

நானோர் கவிதை தேனீ
பேர் தான் எழினி – என்னிடம்
சொல்லாதே பழினீ

ஒடிந்த பலா


தானே ஒடித்து கொள்ளும்
தற்குறிகள் இவை அல்ல
யாரும் ஒடித்துவிட
எதிரிகளும் இதற்கு இல்லை
ஏனோ வந்த ஊழ்
எல்லாம் இங்கு பாழ்
தானே தந்த வினை
பாருமெம் தாழ் வினை
***
நீ கொடுத்த நிழல்கள்
நிழலாகி போனதுவே
இனியாம் யார்
மடியில் படுத்துறங்க
என்னருமை பலா மரமே…
வியர்வையைப் பாச்சித்தான்
உம்மை வளர்த்தோம்
எல்லாம் வீணாகி போனதனால்
வெம்மி தவித்தோம்
***
நீ வளர்த்ததெனினும்
நீ வளர
யாம் வளர்த்த
நினைவுகளை
அறுக்காதே
நெஞ்ச வயல்
பாலையானால்
தோன்றுவதுக்
கானல் நீரல்ல
கண்ணீர்…

இது தானே ஓடிந்ததல்ல தானே ஒடித்த பலா

இது தானே ஓடிந்ததல்ல தானே ஒடித்த பலா

ஒ தென்றலே நீ
தீண்டிய போதெல்லாம்
வெட்கத்தால் குனிந்த
என் தலையை
ஏன் திருகி சென்றாய்?…
நான் காய்க்கும்
முன்னமே என்னைக்
களவாடியது
என் கனிகளுக்கா ?
ஒ.. அகலிகா
கெளசிக உருவில் வந்த
இந்திரனும் தானேபோல்
தான் நுழைந்தானோ?
நானோ அவனுடன்
ஓடிப்போயிருந்தால்
பிழைத்திரிப்பேனோ - ஆனால்
உலகம் பழித்திருக்கும் -
நாணம் இல்லையென…
நான் வீழ்ந்த பின்னரே
அறிந்தேன் – நான்
வஞ்சகனின்
வலி அறியா
பெண்மையென
வடியும் என்
கண்ணீரும்
வெண்மையென …

புதன், 5 டிசம்பர், 2012

பெருவளத்தான் பெருமை


என்ன எழுத

நான் புதைத்ததுதும்
என்னில் புதைந்ததும்
மண்ணில் புதைத்தாலும்
மக்காத பன்மடியாய்
மனதில் கரைந்தும்
நிறங்கள் மறையாத
என் நினைவுகளை
சேமிக்க இந்த வலை
நல்ல வளை

 
என்ன எழுத நான்
என்ன எழுத
என்னை எழுத
எனக்கு ஆசை நான்
என்னை எழுத
எனக்கு ஆசை
பிறரைத் தழுவா
நெறி வழுவா
இந்த குழவி
என்ன எழுதும் - இது
தன்னை வளர்த்த
மண்ணை எழுதும்..